Scan QR
Everest Group Of Companies in pollachi
Everest Tribal Honey -6379314443
Forest Honey
Mountain Honey
Small Bee Honey
Kombu honey
Honey benefits in Tamil
Honey benefits/-
மலையில் உள்ள மரங்களில் இருந்து சேகரிக்கப்படும் தேனில், மூலிகை மருத்துவ குணம் இருப்பதால், மருந்து பொருட்களுடன் சேர்த்து கொடுக்கும்போது ஜீரண பாதையில் மருந்து உறிஞ்சப்பட்டு விடுகிறது. இதனால் இரத்த ஓட...
Scan QR
Everest Group Of Companies in pollachi
Everest Tribal Honey -6379314443
Forest Honey
Mountain Honey
Small Bee Honey
Kombu honey
Honey benefits in Tamil
Honey benefits/-
மலையில் உள்ள மரங்களில் இருந்து சேகரிக்கப்படும் தேனில், மூலிகை மருத்துவ குணம் இருப்பதால், மருந்து பொருட்களுடன் சேர்த்து கொடுக்கும்போது ஜீரண பாதையில் மருந்து உறிஞ்சப்பட்டு விடுகிறது. இதனால் இரத்த ஓட்டத்தில் மருந்து விரைவில் கலந்து செயல்படத் தொடங்குகிறது.
1.விரைவில் செரிப்புத் தன்மையை உண்டாக்கி, மலச்சிக்கலை போக்குகிறது.
2.குழந்தைகள் தினம்தோறும் தேனை அருந்தினால் கால்சியம் மற்றும் மக்னீசியத்தின் அளவு அதிகமாகி நல்ல வலிமை கிடைக்கும்.
3.கண் நோய், தோல் நோய்களுக்கும் தேனை பயன்படுத்தலாம். வெங்காயச்சாறுடன் தேனை கலந்து சாப்பிட்டால் கண் பார்வை பிரகாசம் அடையும்.
4.இளம் சூடான வெந்நீருடன் எலுமிச்சம் பழச்சாறு கலந்து, தேனை அருந்தினால், வாந்தி, குமட்டல், ஜலதோஷம், தலைவலி போன்ற நோய்கள் குணமாகும்.
5.தேனில் உள்ள குளுக்கோஸ் சத்து சிறிய இரத்த நாளங்களை சீராக விரிவடையச் செய்து, ரத்த ஓட்டத்தை சீராக்கும். இதனால் இதயத்திற்கு ஏற்படும் பாதிப்பு தடுக்கப்படும்.
6.தேன், முட்டை,பால் கலந்து சாப்பிட்டால் ஆஸ்துமா நோயில் சிக்காமல் தப்பலாம்.
7.மூட்டு வலிகளுக்கு சிறந்த மருந்து தேன். வலி உள்ள இடத்தில் நன்றாகத் தேய்த்து விட வேண்டும். தினமும் ஒரு ஸ்பூன் தேன் உட்கொண்டு வந்தால்
மூட்டுகள் வலிக்காது. தேயாது.
8.தேனுடன் இஞ்சி, விதை நீக்கிய பேரிச்சம்பழத்தை ஊற வைத்து சாப்பிடுவதால் நோய் எதிர்ப்பு சக்தி பெருகும்
9.தூக்கம் ஏற்படுவதற்கு தேன் அருமையான மருந்து ஆகும்.
10. தேனையும் மாதுளம் பழ ரசத்தையும் சம அளவு சேர்த்துத் தினமும் சாப்பிட்டால் இுதய நோய்கள் தீரும்
தேனும், சூடான வெந்நீரும் கலந்து சாப்பிட்டால்நம் இதயத்தைப் பலப்படுத்தும் தேன், நமது ரத்தத்திலுள்ள சிவப்பணுக்களின் எண்ணிக்கையையும் அதிகரிக்கிறது. உடலில் ரத்தத்தைத் தூய்மைப்படுத்துவதோடு இதயத்தின் தசைநார்களுக்கும் வலிமையைத் தருகிறது. இதயம் சீராக இயங்கவும் உடலுக்குச் சீரான ரத்த ஓட்டம் கிடைக்கவும் தேன் துணைபுரியும். ரத்தத்திலுள்ள வேண்டாத நச்சுத் தன்மையுள்ள பொருள்களை வெளியேற்றி ரத்தத்தைத் தூய்மைப்படுத்த தேன் உதவுகிறது.
தேன் கல்லீரல் செயல்பாட்டைத் தூண்டுகிறது. மேலும், கிளைகோஜன் உருவாக்கத்துக்கும் நச்சுப் பொருள்களை கல்லீரல் மூலம் வெளியேற்றவும் பெரிதும் உதவுகிறது. குடல் சம்பந்தப்பட்ட வியாதிகளைத் தேன் குணப்படுத்துகிறதுதேன், பசியை அதிகரிக்கச் செய்யும். உடலிலுள்ள கழிவுப் பொருள்களையும் எளிதாக வெளியேற்ற உதவும். வாயுவை வெளியேற்றும் ஆற்றலும் தேனுக்கு உண்டு. அதுமட்டுமா? தேன் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியையும் அளிக்கிறது. தொற்றுநோயை எதிர்க்கும் ஆற்றல் இதற்கு உண்டு. காய்ச்சல் போன்ற நோய்க்கு தேன் சிறந்த மருந்தாகிறது. அது அந்நோயாளிகளுக்கு இழந்த சக்தியை அளிப்பதோடு அந்நோய்க்கிருமிகளை எதிர்த்து போராடும் சக்தியையும் அளிக்கிறது.தேன் தொண்டையினுள் சதை வளர்வதைத் தடுக்கிறது. தொண்டைக்கட்டு இருமலையும் குணப்படுத்துகிறது. நரம்புத்தளர்ச்சியை நீக்கி தூக்கத்தில் படுக்கையில் சிறுநீர் கழிப்பதைத் தடுக்கிறது. கைகால் நடுக்கத்தைப் போக்க வல்லது. எலும்புகளுக்குகூட வலிமை தரக்கூடியது. தேன், தூக்கமின்மையைத் துரத்தி உறக்கம் தரவல்லது. மேலும், தேன் உணவில் சேர்ப்பதால், பற்களும் எலும்புகளும் வலுப்பெறும். தசைகளும் வலுப்பெறும். ரத்தக் குறைவால் ஏற்படும் சோகை நோயைக் குணமாக்க வல்லது.தேன், சீழ்பிடிக்கும் நிலையிலுள்ள புண்களை ஆற்ற உதவுகிறது. கட்டிகள், கொப்புளங்கள் வெந்தபுண்கள் வெட்டுக் காயங்கள், தீக்காயங்கள் ஏற்பட்டால், அதில் தேனைத் தடவி குணப் படுத்தலாம். மூளைப் பகுதியில் சீரான ரத்த ஓட்டம் பெற உதவும். தேன், அதன்மூலம் நினைவாற்றலும் அதிகரிக்க உதவும். கீழ்வாதம் பக்கவாதம் போன்ற நோய்களைக் குணமாக்க உறுதுணையாகத் தேன் உதவும். ரத்தமூலம் இருப்பினும் அதைக் குணமாக்கும் இயல்பு தேனுக்கு உண்டு.. பருத்த உடல் இளைக்கும்.